December 24, 2013

தகவல் தொகுப்பு

>>டிவி கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் மக்கள் யாரும் பொறுமையாக அவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்க்க மாட்டார்கள்,எனவே டிவி தயாரிப்பு தோல்வியில் முடியும் என்று டைம்ஸ் இதழில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

>>குறைந்தபட்சம் உங்களைப் போல் தோற்றம் கொண்ட ஆறு பேர் இந்த உலகில் இருக்கலாம்.அவர்களை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்பு 9% சதவீதம் உள்ளது.

>>இந்தியாவில் IQ Level 120க்கு மேல் உள்ளவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.இவர்கள் மொத்த அமெரிக்க மக்கள் தொகைக்குச் சமம்.

>>ஜாக்கி சான் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு நைட் க்ளப்பில் பவுண்சராக வேலை செய்து வந்தார்.ஒரு முறை அங்கு ஏற்பட்ட சண்டையில் ஜாக்கியின் உள்ளங்கை எலும்பு உடைந்து வெளியே தெரிந்து கொண்டிருந்தது.இரண்டு நாட்களாக அதை சரி செய்ய முயற்சித்த ஜாக்கிக்கு பின்புதான் தெரிந்தது அது வேறு ஒருவனுடைய பல் என்று.

>>மனிதனின் கண்கள் ஒரு டிஜிட்டல் கேமராவாக செயல்பட்டால் அதன் மெகாபிக்சல் 576.

>>அதிக நேரம் தண்ணீரிலேயே இருந்தால் கை மற்றுல் கால் பாதங்களில் உள்ள தோல்கள் சுருங்குவிடுவதை பார்த்திருப்பீர்கள்(அதிக நேரம் குளிக்கும்போது பாருங்கள்).

தண்ணீரில் அதிக நேரம் இருப்பதால் கை காலில் உள்ள தோல் ஊறிவிடுவது அல்லது சோப்பின் தன்மை என்பது தவறான காரணம்.

சரியான காரணம்: ஈரமான பொருட்களை கையாளும்போது ஒரு பிடிமானம் நமக்கு தேவைப்படுகிறது.உதாரணமாக ஒரு மழை நாளில் சாலையில் செல்லும் கார் டையர்களை கவனியுங்கள்.டயர் வழுவழுப்பானதாக இருந்தால் கார் வழுக்கி கீழே விழ வாய்ப்புள்ளது.
அதுபோல நமது மூளையின் செயல்பாடு காரணமாக ஏற்படும் அனிச்சை செயலால் நீரில் இருக்கும்போது பிடிமானத்திற்காக தோலில் சுருக்கம் ஏற்படுகிறது.

>>செல்போன்களில் உங்களுடைய குரலை பதிவு செய்து கேட்டால் உங்களுக்கே அது பிடிக்காமல் போவதையும் சற்று வித்தியாசமாக இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

அதற்கு காரணம் நாம் சாதரணமாக பேசும்போது நமது குரல் ஒலி முழுவதும் காற்றின் வழியில் காதுகளை அடையாமல் சிறிதளவு ஒலி நம் தலையில் உள்ள எலும்புகளில் ஏற்படும் அதிர்வுகள் மூலம் கடத்தப்படுகிறது.

உங்களுடைய உண்மையான குரல் என்பது நீங்கள் செல்போனில் பதிவு செய்து கேட்கும் குரல்தான்.மற்றவர்களுக்கும் அது அப்படித்தான் கேட்கும்.


-கவின்

Facebook Comment Box

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...