September 10, 2013

விமானம் எவ்வாறு பறக்கிறது -2

விமானம் எவ்வாறு பறக்கிறது -1 படிக்க க்ளிக் செய்யவும்.                              

                                      சிறுவயதில் நமக்கு விமானத்தின் செயல்பாடு பற்றி சரியான புரிதல் இருக்காது.விமானத்தின் முன்னே உள்ள ப்ரொப்பலர் சுற்றுவதால் விமானம் பறக்கிறது என நாம் நினைத்துக்கொண்டிருப்போம்.அதுவும் ஓரளவு சரியானதுதான் என்றாலும் முழு செயல்பாட்டையும் அறிந்து இருக்க மாட்டோம்.

விமானத்தை விமானி ஓட்ட ஆரம்பித்தவுடன் விமானம் அதன் ஓடுபாதையில் இருந்து நேராக சென்று மேலெழும்புகிறது.இதற்கு காரணம் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள விமானத்தின் சிறப்பான ஒரு றெக்கை வடிவமைப்பு ஆகும்.ஒரு விமானத்தின் றெக்கை சற்று வளைவான வடிவமைப்பில்(Concave Downward Shape) அமைந்திருக்கும்.

விமானம் முன்னோக்கி நகரும்போது   வளிமண்டல காற்று  றெக்கைளின் மேல் மோதுகிறது.அவ்வாறு மோதும் காற்றில்  அதிவேக காற்று றெக்கையின் மேல்புறமும் வேகம் குறைந்த காற்று றெக்கையின் அடிப்புறமும் மோதுவதுபோல விமானத்தின் றெக்கை வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இப்பொழுது முந்தைய பதிவில் சொன்ன பெர்னோலி கோட்பாட்டை சற்று ஞாபகப் படுத்திப் பார்ப்போம்.

அதாவது ”பாய்மத்தின்(காற்று) வேகம் அதிகரிக்க சம அளவில் அழுத்தம் குறைகிறது”.

அப்படியெனில் அதிவேக காற்று றெக்கையின் மேற்புறம் செயல்படுவதால்  றெக்கையின் மேற்புறம் அழுத்தம் குறைகிறது.றெக்கையின் கீழ்புறம் பெரிய ப்ரொப்பலர்கள் கீழே படத்தில் உள்ளது போல அமைக்கப்பட்டு காற்றை
பின்னோக்கி தள்ள நியூட்டனின் விதிப்படி காற்று விமானத்தை முன்னோக்கி தள்ளுகிறது. ப்ரொப்பலர்கள் விமானத்தில் முன்னுந்து(Thrust) விசையை ஏற்படுத்தி விமானத்தை முன்னோக்கி நகர்த்துகிறது.

இப்போது பெர்னோலி சமன்பாட்டின்படி அழுத்தம் குறைவாக இருப்பதால் காற்று என்னும் பாய்மத்தில் விமானம் எளிதாக மேல்நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது.

இப்பொழுதுமேல்நோக்கி பறக்கும் விமானம் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட உயரம் வரை சென்ற பின்  நேர்க்கோட்டில் செல்கிறது என்று பார்ப்போம்.
விமானம் பறப்பதில் நான்கு வகை வளிமண்டல இயக்க விசைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.அவை

1) Thrust(நெட்டு (அ) முன்னுந்து)
2) Drag(பின்னிழுவை)
3) Lift(மேலுந்து)
4) Weight(எடை)

                                     


ஒரு விமானம் வானில் ஒரே நேர்க்கோட்டில் சீராக பறக்க மேற்சொன்ன நான்கு விசைகளில் முன்னுந்து மற்றும் பின்னிழுவை விசைகள் சமமாகவும்(Thrust=Drag) மேலும் மேலுந்து மற்றும் எடை ஆகிய இரண்டும் சம அளவிலும்(Lift=Weight) இருக்க வேண்டும்.

>>முன்னுந்து விசையானது பின்னிழுவை விசையை விட அதிகமானால்(Thrust > Drag) விமானத்தின் வேகம் அதிகரிக்கும்.
>>முன்னுந்து விசையானது பின்னிழுவை விசையை விட குறையுமானால்(Thrust Drag)   விமானத்தின்  வேகம் குறையும்.

மேலும் வேகத்தைக் கட்டுப்படுத்த றெக்கைகளிலும் விமானத்தின் வாலிலும் தகடு போன்ற ஒரு அமைப்பு தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ள வைத்திருப்பார்கள்.

>>மேலுந்து விசையானது எடையை விட அதிகமானால்(Lift > Weight) விமானம் மேலெழும்பும்.
>>மேலுந்து விசையானது எடையை விட குறையுமானால் (Lift < Weight) விமானம் கீழிறங்கும்.



சில சாகச விமானத்தின் றெக்கைகள் தாக்கு கோணம்(Angle Of Attack) விமானத்தை உடனடியாக  பயன்படுகிறது.தாக்கு கோணம் என்றால் என்ன என்பதை எளிதாக விளங்கிக்கொள்ள கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.






சாகச விமானத்தின் றெக்கைகளை பல்வேறு கோணங்களுக்கு மாற்றி விமானத்தை சீராகவும்,கீழ்நோக்கியும் மேல்நோ
க்கியும் விமானத்தை திருப்பலாம்.மேலும் பல்வேறு வகையான சாகசங்கள் நிகழ்த்த விமானத்தின் றெக்கைகளில் சிறிய  துடுப்பு போன்ற அமைப்பு இருக்கும்.அவை Flaps மற்றும் Ailerons என்று அழைக்கப்படுகின்றன.

இவையே ஒரு விமானம் அடிப்படையில் இயங்கும் விதமாகும்.உங்கள் கேள்விகள் பின்னூட்டத்தில். .

நன்றி.



Facebook Comment Box

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...